இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது.

நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான சத்துகளை அப்படியே கொடுக்கிறது.

குறிப்பாக தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பெரும்பாலும் காலை உணவிற்கு இட்லி சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உலகிலேயே பலவகை சுவையான உணவுகள் இருந்தாலும் சுவையைத் தாண்டி சத்துக்கள் நிறைந்த சிறந்த காலை உணவாக இட்லி இருக்கிறது.

திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களில் இடம்பெறும் இட்லி இது. சாதாரண இட்லியை விட மிருதுவாகவும் அளவில் சற்று பெரிதாகவும் உள்ள குஷ்பு இட்லி கொங்கு மாவட்டங்களில் மிகப் பிரபலமானது. மல்லிகைப்பூ இட்லி என்ற பெயரும் இதற்கு உண்டு.