சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் விவகாரம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..


சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாவில் உலக வழக்கொழிந்த சமஸ்கிருதத்தில் மதம் சார்ந்த இறைவணக்க பாடல் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இதுபோன்ற செயலை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.