முக்கிய செய்திகள்

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்படும் : விஷால் பேட்டி..

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரையுலகை சார்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி நடத்த தடை கோரிய மனுவுக்கு, வரும், 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மார்ச் 3-ம் தேதி நடக்கவுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோடம்பாக்கத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தப்படும்.

இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இளையராஜா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு யாராலும் பூட்டு போட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.