முக்கிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் பெரிய ரசிகன் நான்: ஒபாமா

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா, தம்மை பிரதமர் மன்மோகன்சிங் கின் பெரிய ரசிகன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஹிந்துஸ்தான் நாளேடு சார்பாக நடைபெற்ற தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற ஒபாமா, பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்காவின் அதிபராக அவர் இருந்த போது, இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஒபாமா, இந்தியாவின் நவீனப் பொருளாதாரத்திற்கு அடிக்கல் நாட்டிய மன்மோகன் சிங்கிற்கு தாம் பெரிய ரசிகன் என்றார், 2008 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையை எதிர்கொள்ள மன்மோகன்சிங் மிகவும் உதவியாக இருந்தார் என மனம் நெகிழ்ந்து பாராட்டினார். இந்தியப் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்திய மன்மோகன் சிங்கின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டிய ஒபாமா, அவர் தமக்கு மிகச்சிறந்த நண்பர் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, அவரையும் எனக்குப் பிடிக்கும் எனவும், நிர்வாகக் கட்டமைப்பை நவீனப் படுத்த அவர் முயன்று வருவதாகவும் கூறியுள்ளார். மோடிக்கு நாட்டின் எதிர்காலம் குறித்த பார்வை இருப்பதை அறிய முடிவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

I’m big fan of  Manmohan: Obama