சசிகலாவிடம் வருமான வரிச்சோதனை தொடர்பாக விசாரிக்க வருமான வரித்துறை முடிவு…

கடந்தாண்டு நடைபெற்ற வருமான வரிச் சோதனை தொடர்பாக பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் வரும் 13 மற்றும் 14-ம் தேதியில் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

2017 நவம்பர் மாதம் சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்கள் என 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் அப்போது தான் மவுனவிரதம் இருப்பதாக சசிகலா பதிலளித்தார்.

இந்த நிலையில் வரும்13 மற்றும் 14-ம் தேதியில் சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்திக் கொள்ள வருமான வரித்துறைக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

அடிலெய்ட் டெஸ்ட் : 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸி., அணி 7விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள்

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..

Recent Posts