முக்கிய செய்திகள்

பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா

பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது.

இந்த மூட நம்பிக்கை எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது வேதனை.

உங்கள் பிரச்சனையை ஒரு கல்லால் அல்லது எந்திரத்தால் தீர்த்து வைக்கிறோம் எனக் கூறி தொலைக்காட்சி விளம்பரங்களால் பல ஆயிரங்களை இழந்தவர்கள் அதிகம்.

மற்றொரு பக்கம் அடுத்தவனை பயமுறுத்தும்படி கொடூரமாக படங்களை வைப்பது.அல்லது மண்டை ஓடு,எழும்புகளை வைத்து மந்திரத்தால் எல்லாம் செய்ய முடியும் என நம்ப வைக்கின்றனர். பின்னர் படிப்படியாக பொருளாதாரத்தையே உறிஞ்சுகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் குடும்ப உறவுகளையோ அல்லது எதிரிகளையோ மந்திர மாந்திரீகத்தால் வீழ்த்த துடிப்பவர்களே இவர்களை அணுகி தன்னுடைய வாழ்வை இழந்து தவிக்கின்றனர்.

சில பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் குட்டிசாத்தானை வைத்து பூஜையே செய்கின்றனர்.

சிலர் நரபலி வரை செல்லுகின்றனர். பில்லி,சூன்யம்,மந்திரீகம் என்பது பொய், மூட நம்பிக்கை,
மக்களிடம் காசு பறிக்க செய்யும் திருட்டில் இதுவும் ஓருவகை

இந்த அயோக்கியர்கள் இவர்களை நம்பி வரும் பெண்களை மூளை சலவை செய்து அவர்களின் காம இச்சைக்கு பலியாக்குகின்றனர்.

இதில் மந்திரம்,மாந்திரீகம் பயிற்சி விளம்பரம் வேறு

பல குடும்பங்களை சீரழித்து வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் என்ற பித்தாட்டத்திலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற

மகாராஷ்டிர அரசு தடைவிதித்து போல் தமிழக அரசும் தடை விதிப்பதுடன்.இவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.