முக்கிய செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி: டையில் முடிந்த ஆட்டம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்துள்ளது.

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி  ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 129 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 157 ரன்கள் குவித்தார். 81 ரன்கள் அடித்திருக்கும்போது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இதனையடுத்து 322 ரன்கள் வெற்றி இலக்கு என்ற கணக்கில் களமிறங்கிய வெஸ்ட இண்டிஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது ஒரு நாள் போட்டி டைய்யில் முடிந்தது. வெஸ்ட இண்டிஸ் அணி வீரர்கள் ஹெட்மயர் 64 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். இறுதி வரை விளையாடிய சாய் ஹோப் 134 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.