சுயேட்சைகளின் ஆதரவு வாபஸ்: கா்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து..

கா்நாடகாவில் முதல்வா் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்..

கா்நாடகா முதல்வா் குமாரசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருவரும் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளனா்.

கா்நாடகாவில் பெரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றாா். பதவியேற்றதில் இருந்தே காங்கிரஸ்,

மதசாா்பற்ற ஜனதா தளம் கூட்டணிகளுக்கு இடையே சலசலப்பு நிலவுவதாக தகவல்கள் வெளிவந்தன.

மேலும் கூட்டணியில் உள்ள உறுப்பினா்களை பா.ஜ.க. இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் வெளிப்படையாக கருத்து தொிவித்தது.

இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.

சுயேட்சை உறுப்பினா்களான நாகேஷ், ஷங்கா் ஆகிய இருவரும் ஆதரவை திரும்ப பெறுவதாக அம்மாநில ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து சுயேட்சை உறுப்பினா்கள் கூறுகையில், கூட்டணிக்கிடையே புரிதல் இல்லாததாலும்,

நிலையான ஆட்சி வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக இருவரும் கருத்து தொிவித்துள்ளனா்.

224 உறுப்பினா்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 113 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் குமாரசாமிக்கு 119 உறுப்பினா்களின் ஆதரவு இருந்த நிலையில் தற்போது அது 117ஆக குறைந்துள்ளது.

மேலும் சில சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா.ஜ.க.வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.