முக்கிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகள் அணி 295/7

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவின் ஷர்துல் தாகூர் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.