இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,337 பேர் கரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,247 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 53,08,015 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 85,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 10,13,964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42,08,432 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

என்ஐஏ நடத்தியஅதிரடி சோதனையில் கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது ..

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..

Recent Posts