இந்திய-சீன ராணுவம் இடையே மோதல் : தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்…

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மரணமடைந்த வீரர்களில் ஒருவர் பழனி என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி வயது 40. 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் அவருக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வந்ததாக முதலில் தெரியவந்துள்ளது.

அவரது உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்; இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி : சுகாதாரத்துறை அறிக்கை

Recent Posts