இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு கரோனா தொற்று உறுதியனதால்,கரோனா வைரசால் 1.58 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 158333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67692 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 56948 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 18545 பேருக்கும், குஜராத்தில் 15195 பேருக்கும், டெல்லியில் 15257 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

Recent Posts