இந்தியாவில் , நேற்று ஒரே நாளில், 19 459 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 ,48, 318 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ,475 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், நாடு முழுதும், 19 , 459 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5,48, 859 ஆக உயர்ந்துள்ளது.
2 லட்சத்து, 10 ஆயிரத்து 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 64 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 429பேர் மரணமடைந்துள்ளனர்.
டில்லியில் 83 ஆயிரத்து 077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 623 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 79 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 31 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 808 பேர் மரணமடைந்துள்ளனர்.
உ.பி.,யில் 22 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 660 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 17 ஆயிரத்து, 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 639 பேர் மரணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 399 பேர் மரணமடைந்துள்ளனர்.