இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிய நிலையில், குணடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனிடையே, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கை
நாடு முழுவதும் நேற்று (ஜூன் 27) வரை 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதில், 2 லட்சத்து 31 ஆயிரத்து 095 பரிசோதனைகள் நேற்று மட்டும் நடந்தது என தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 19 ஆயிரத்து, 906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. 2 ,03,051 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 , 09,713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.