முக்கிய செய்திகள்

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,315-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,771 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் இதுவரை 18,655 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 442 உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 3,94,227 பேர் கரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,335 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,92,990 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8376 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,04,687 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,02,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58,378 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 94,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,923 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65,624 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.