இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 42.80 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேர் கரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 42,80,423 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72,775 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,83,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 33,23,951 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பரிசோதனைகளை பொறுத்த அளவில், தற்போது வரை 5,06,50,128 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 10,98,621 பேரின் மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.