முக்கிய செய்திகள்

இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கரோனா…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 97,570 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் 46 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியான தகவலின்படி, இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9.58 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிரா. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உ.பி மாநிலங்களில் இருந்து தினமும் 60 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர். இதே போல், இந்த மாநிலங்களில் இருந்து தான் 57 சதவீத புதிய பாதிப்புகள் வருவதாக கூறப்படுகிறது.