இந்தியாவில் ஒரே நாளில் 10,974 பேருக்கு கரோனா உறுதி …

இந்தியாவில் (ஒரே நாளில்10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரித்தது.

நேற்று(ஜூன் 16) ஒரே நாளில் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 1,409 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 065 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 935 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 2003 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 6 ஆயிரத்து 922 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லடாக் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு..

முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு..

Recent Posts