இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 96,424 பேருக்கு ‘கரோனா தொற்று…

இந்தியாவில் ஒரே நாளில் 96,424 பேருக்கு கரோனா தொற்று பாதித்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தைக் கடந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்து 14 ஆயிரத்து, 677 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,174 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு உயிரிழக்க மொத்த இறப்பு எண்ணிக்கை 84,372 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் ஒரே ஆறுதல் கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 41 லட்சத்து 12 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று இறப்பு விகிதம் மொத்த தொற்று எண்ணிக்கையிலிருந்து பார்க்கும் போது 1.62% ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 10 லட்சத்து, 17 ஆயிரத்து 754 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். மொத்த தொற்று எண்ணிக்கையில் இது 19.52% ஆகும்.

ஆகஸ்ட் 7ம் தேதி 20 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு விகிதம் செப்.17-ல் 52 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஐசிஎம்ஆர் தகவல்களின் படி இதுவரை 6 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 343 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செப்.17-ல் மட்டும் 10,06,615 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன

1,174 மரணங்களில் மகாராஷ்டிராவில் 468 பேர், கர்நாடகாவில் 93, உ.பி.யில் 81, ஆந்திராவில் 72, மேற்கு வங்கத்தில் 60, தமிழகத்தில் 59, பஞ்சாபில் 54, டெல்லியில் 38, மத்திய பிரதேசத்தில் 33, ஹரியாணாவில் 24, ஜம்மு காஷ்மீர் 19, அஸாம், சத்திஸ்கரில் முறையே 17, குஜராத், ராஜஸ்தானில் 14, ஒடிசா, புதுச்சேரி, உத்தரகண்டில் முறையே 13. ஜார்கண்ட், தெலங்கானவில் முறையே 11, கேரளாவில் 9 பேர், கோவாவில் 8 பேர், பிஹார், இமாச்சலத்தில் தலா 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கையான 84,372-ல் மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை அதிகபட்சமாக 31,351 ஆக உள்ளது. 2வது இடத்தில் தமிழகத்தில் 8,618 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கர்நாடகாவில் 7,629, ஆந்திராவில் 5,177, டெல்லியில் 4,877, உ.பி.யில் 4,771, மேற்கு வங்கத்தில் 4,183, குஜராத்தில் 3,270, பஞ்சாபில் 2,466, ம.பி.யில் 1,877 பேர் மரணமடைந்துள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு சவரன் ரூ.39,496க்கு விற்பனை..

ஒரு குவிண்டால் நெல்லை ரூ.850க்கு விற்கும் நிலை: தமிழக விவசாயிகள் வேதனை: ப.சிதம்பரம் கேள்வி..

Recent Posts