இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27892 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27892 ஆக உயர்ந்துள்ளது.

20,835 பேர் கரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.381 நோயாளிகள் கடந்த ஒருநாளில் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதுவரை 6184 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 22.17 சதவிகிதமாக உள்ளது.

ஏற்கனவே, கரோனா தொற்று இருந்த 16 மாவட்டங்களில், கடந்த 28 நாட்களில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..

கரோனா சோதனைக் கருவி ஊழல்: நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது..: ராகுல் காந்தி..

Recent Posts