முக்கிய செய்திகள்

இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து : பரிசோதனக்கு மத்திய அரசு ஒப்புதல்..

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல்முறையாக, முதல் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாளர் அமைப்பு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம்(என்ஐவி) ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டாகக் கண்டுபிடித்துள்ளது. கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

கிளிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும்பரிசோதனையும் முடித்துள்ளநிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தை செலுத்தி பரிசோதி்க்க பாரத் பயோட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரத் பயோெடக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஐசிஎம்ஆர், என்ஐவி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி தற்போது “கோவாக்ஸின்” எனும் மருந்தை கண்டுபிடித்துள்ளோம். முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து பாரத் பயோடெக்கின் பிஎஸ்எல்-3 அதிநவீன பாதுகாப்பு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தைய ஆய்வுகள், பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விளக்கம் ஆகியவற்றை அளித்தபின் மனிதர்களுக்கு 2 கட்டங்களாக பரிசோதிக்க எங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரகக்கட்டுப்பாடு அமைப்பும் அனுமதி வழங்கியுள்ளது.