ஆப்கானில் இந்தியா நூலகம் அமைப்பது பற்றி டிரம்ப் கிண்டல்..

உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட இந்தியா நிதி உதவி செய்தவதால் என்ன பயன் என்று நக்கலாகப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

2019ஆம் ஆண்டின் முதல் அமெரிக்க அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

அப்போது வெளிநாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவிடுவதைக் குறைத்துக்கொள்வது பற்றி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக்கு இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்ற ட்ரம்ப்,

இதற்காக அமெரிக்கா பில்லியன் டாலர்கள் கணக்காக செலவிடுகிறது என்றும் மற்ற நாடுகள் செலவிடுவது மிகவும் அற்பமான தொகைதான் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமர் மோடியை குறிப்பிட்ட ட்ரம்ப், “ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவதைப் பற்றி தொடர்ச்சியாக மோடி என்னிடம் தெரிவித்தார்.

அதற்காக நாம் நன்றி கூறவேண்டுமாம். ஆனால் நூலகங்களை ஆப்கானிஸ்தானில் யார் பயன்படுத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை.” எனக் கேலியாகச் சொன்னார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா தரப்பு, சமூக வளர்ச்சித் திட்டமாக ஆப்கானிஸ்தானில் சிறு நூலகங்களை இந்தியா கட்டிக்கொடுக்கும் என்றும்,
அந்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகள் அந்நாடு ஸ்திரத்தன்மை வளர்ச்சி மற்றும் பொருளாதார அதிகாரத்தை அடைவதற்கு உதவும் எனவும்

ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டிடம், அந்நாட்டில் கட்டப்பட்ட சல்மா அணை, 218 கிலோமீட்டர் நீள சாலை போன்றவை

இந்தியாவின் திட்டங்களே எனவும் இந்தியாவின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.