முக்கிய செய்திகள்

இலங்கையில் தமிழர்களுக்கான வீடுகைள ஒப்படைத்த பிரதமர் மாடி

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக கட்டப்பட்ட 404 வீடுகளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.

இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக இந்திய அரசு நிதி உதவியின் கீழ் 14 ஆயிரம் வீடுகள் கட்டி, அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இலங்கை மத்தியில் உள்ள நுவரெலியா நகரில் முதற்கட்டமாக 404 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை மலையக தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்தார். டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடியும் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைத்தார்.

India hand overs the houses for Srilankan Tamils