இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை ..

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 13வது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றார்.

விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்,பியூஜி மலையடிவாரத்தில் அமைந்துள்ள யமனாகி நகருக்கு சென்றார்.

அங்கு, மோடியை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கட்டியணைத்து வரவேற்றார்.

தொடர்ந்து காதியில் தயாரிக்கப்பட்ட படிகக்கல் கிண்ணங்கள், மரத்திலான பெட்டகம் மற்றும் ராஜஸ்தானின் பாரம்பரிய தரைவிரிப்புகளை , மோடி, ஜப்பான் பிரதமருக்கு பரிசாக அளித்தார்.

இதனை தொடர்ந்து, அந்த நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரோபோட் தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அங்கு ரோபோட்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இரு தலைவர்களும் அதிகாரப்பூரவமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மோடிக்கு, ஜப்பான் பிரதமர் இரவு விருந்து அளிக்க உள்ளார்.

இதன் பின்னர், உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், இந்திய சமுதாயத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அந்நாட்டு நாளிதழுக்கு எழுதிய கட்டுரை: 1957 ல் ஜப்பான் பிரதமராக இருந்த எனது தாத்தா நோபுசிக்கே கிஷி,இந்தியா சென்றபோது, பிரதமராக இருந்த நேரு, மரியாதைக்குரிய ஜப்பான் பிரதமர் என அறிமுகம்செய்தார்.

இதன் பின்னர் ஜப்பானுக்கு ஏராளமான நிதியுதவி கிடைக்க ஆரம்பித்தது. இதைஎல்லாம் மனதில் வைத்து, இந்தியாவுடான நட்புறவை பலப்படுத்த என்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்.

உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கு,2007 ல் நான் சென்றபோது, பார்லிமென்டில் பேசும் கவுரவம் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மோடியுடன் ஆமதாபாத் சென்றபோது, மக்கள் அளித்த வரவேற்பை மறக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் நண்பனாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளது : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை..

இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது : மீட்பு பணிகள் தீவிரம்..

Recent Posts