முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பு : மலேசிய பிரதமர் மகாதீர்..


இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்தோனேஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று வந்தடைந்தார். அவருக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமது சிறப்பான வரவேற்பளித்தார். இருவரும் பல்வேறு பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்திய பிரதமருடான சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியதாவது: பல துறைகளில் எவ்வாறு இந்தியாவும், மலேசியாவும் இணைந்து செயல்படுவது குறித்து நானும், மோடியும் ஆலோசனை நடத்தினோம். முன்பை விட வர்த்தகத்திற்கு தற்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பள்ளிகளில் கற்பிக்கும் முறை குறித்து நாம் கற்று கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.