இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,900 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை :

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 013 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 215 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு: அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்…

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி…

Recent Posts