இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி …

இந்தியாவில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,476 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்றால் 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: சவரன் ரூ.37,080-க்கு விற்பனை…

Recent Posts