இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் உயிரிழப்பும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்து 903 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 891 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 60.73 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 379 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 125 பேரும், டெல்லியில் 61 பேரும் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 57 பேர், குஜராத், கர்நாடகத்தில் தலா 19 பேர், உத்தரப் பிரதேசத்தில் 17 பேர், மேற்கு வங்கத்தில் 16 பேர், ஹரியாணாவில் 11 பேர், ஜம்மு காஷ்மீரில் 10 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசத்தில் தலா 8 பேர், பிஹாரில் 7 பேர், ஆந்திராவில் 5 பேர், பஞ்சாப்பில் 3 பேர், புதுச்சேரியில் இருவர், கேரளா, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 8,178 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,864 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,886 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,321 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 699 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 589 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 735 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 430 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 275 ஆகவும், ஹரியாணாவில் 251 ஆகவும், ஆந்திராவில் 198 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 272 பேரும், பஞ்சாப்பில் 152 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 115 பேரும், பிஹாரில் 77 பேரும், ஒடிசாவில் 27 பேரும், கேரளாவில் 25 பேரும், உத்தரகாண்டில் 42 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 10 பேரும், ஜார்க்கண்டில் 15 பேரும், அசாமில் 12 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,172 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,175 பேராக அதிகரித்துள்ளது. 63,007 பேர் குணமடைந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 33,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,593 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 18,662 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14,106 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24,825 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 19,819 பேரும், ஆந்திராவில் 15,252 பேரும், பஞ்சாப்பில் 5,784 பேரும், தெலங்கானாவில் 18,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 7,849 பேர், கர்நாடகாவில் 18,016 பேர், ஹரியாணாவில் 15,509 பேர், பிஹாரில் 10,471 பேர், கேரளாவில் 4,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,640 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 7,545 பேர், சண்டிகரில் 450 பேர், ஜார்க்கண்டில் 2,584 பேர், திரிபுராவில் 1,435 பேர், அசாமில் 9,013 பேர், உத்தரகாண்டில் 2,984 பேர், சத்தீஸ்கரில் 3,013 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,014 பேர், லடாக்கில் 990 பேர், நாகாலாந்தில் 501 பேர், மேகாலயாவில் 56 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 230 பேர், புதுச்சேரியில் 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 331 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 162 பேர், சிக்கிமில் 102 பேர், மணிப்பூரில் 1,279 பேர், கோவாவில் 1,482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..

கரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..

Recent Posts