இந்தியாவில் ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா பாதிப்பு ..

இந்தியாவில்,கரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இன்று (மே 29) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799 ல் இருந்து 1,73,763 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,706 ல் இருந்து 4,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106 ல் இருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. 265 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…

10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

Recent Posts