முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 31) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,763 ல் இருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல்உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையும் 4,971 ல் இருந்து 5,164 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ல் இருந்து 86,984 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 89,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு
மஹாராஷ்டிரா – 65,168 – 2,197
தமிழகம் – 21,184 – 160
டில்லி – 18,549 – 416
குஜராத் – 16,343 – 1,007
ராஜஸ்தான் – 8,617 – 193
மத்திய பிரதேசம் – 7,891 – 343
உத்தர பிரதேசம் – 7,445 – 201
மேற்கு வங்கம்- 5,130 – 309
ஆந்திரா – 3,569 – 60
கர்நாடகா- 2,922 – 48
தெலுங்கானா – 2,499 – 77
கேரளா – 1,208 – 9

புதுச்சேரி- 51 – 0