முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9,971 பேருக்கு கரோனா பாதிப்பு…

இந்தியாவில் அதிவேகமாக கரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டு வருகிறது-நேற்று ஒரே நாளில் 9,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657-லிருந்து 2,46,628-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் 287 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642-லிருந்து 6,929-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073-லிருந்து 1,19,293-ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை விஞ்சி 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.