முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 28) காலை 9:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767 ல் இருந்து 1,58,333 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,337 ல் இருந்து 4,531 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,426 ல் இருந்து 67,692 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 86,110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 7வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.