2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸிதிரேலிய, அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் 2-0 கணக்கில் இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 250 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் 107 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் கோலி சதமடித்தார். ஒரு நாள் போட்டிகளில் கோலி அடித்துள்ள 40-வது சதம் இதுவாகும்.
அதிக சதமடித்தவர் பட்டியலில் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது
பின்னர் களமிறங்கிய ஆஸித்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.