முக்கிய செய்திகள்

உலகப் பெண்கள் இளையோர் குத்துச்சண்டை: 4 தங்கங்களை வென்ற இந்தியா

 உலக பெண்கள் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா 4 தங்கம் வென்றுள்ளது. அசாம் மாநிலம் குவகாத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனைகள்  வெற்றிகளைக் குவித்துள்ளனர்.

48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நீத்து தங்கப்பதக்கம் வென்றார். கஸகஸ்தான் வீராங்கனை உரக்பயேவாவை வீழ்த்தி நீத்து தங்கம் வென்றார். 

51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ரஷ்ய வீராங்கனை மால்ச்சனோவாவை இந்திய வீராங்கனை ஜோதி வீழ்த்தினார். 

54 கிலோ எடைப் பிரிவில்  இந்திய வீராங்கனை சாஷி தங்கப்பதக்கம் வென்றார். இங்கிலாந்து வீராங்கனை ஸ்மித்தை இந்தியாவின் சாஷி தோற்கடித்தார். 

57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோப்ரா சஷி தங்கம் வென்றார். வியட்நாமை சேர்ந்த வீராங்கனை டு ஹாங்கை வீழ்த்தி  சோப்ரா சஷி தங்கம் வென்றார். 

India win 5 Gold Medals, Become Champions At World Youth Boxing