இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 18,522 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி ..

இந்தியாவில் , ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடு முழுதும், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 34 ஆயிரத்து 822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று (ஜூன் 29) வரை 86 லட்சத்து 08 ஆயிரத்து 654 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 292 பரிசோதனைகள் நேற்று மட்டும் நடந்தது என தெரிவித்துள்ளது.

பாதிப்பில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 69 ஆயிரத்து 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 610 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 86 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 141 பேர் மரணமடைந்துள்ளனர்.
டில்லியில் 85 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 680 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 31 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 827 பேர் மரணமடைந்துள்ளனர்.
உ.பி.,யில் 22 ஆயிரத்து 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 672 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 17 ஆயிரத்து, 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 653 பேர் மரணமடைந்துள்ளனர்.