முக்கிய செய்திகள்

இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடிக்கிறாரா சிம்பு?..

இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் இந்தியன். 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் 2-ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சிம்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சேனாதிபதி கமலுக்கு, சிம்பு பேரனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.