முக்கிய செய்திகள்

இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயராகவன் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு


இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதன்மை அறிவியல் ஆலோசகராக, விஜயராகவன் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிருஷ்ணசாமி விஜயராகவன் உயிரியல் கல்விக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குனர் ஆவார். இவர் இந்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டில் இன்ஃபோசிசு வழங்கிய பரிசினைப் பெற்றார். இவர் சென்னையில் பிறந்தவர்.