முக்கிய செய்திகள்

இந்திய பாதுகாப்புத்துறைக்கான இணையதளம் முடக்கம்: சீன ஹேக்கர்கள் கைவரிசை..


இந்தியபாதுகாப்புத்துறைக்கான இணையதளம் சீன ஹேக்கர்களால் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறைக்கான இணையதளத்தை சீன ஹேக்கர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை இந்த இணையதளம் முடங்கியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. சீனா ஹேக்கர்கள்தான் ஊடுருவி இருக்கின்றனர் என்பதற்கு அடையாளமாக சீன எழுத்துக்கள் பாதுகாப்புத்துறைக்கான இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த சீன எழுத்துக்கான அர்த்தம் ‘’ஹோம்’’ என்று பொருள்படுகிறது.
இன்று மாலை இந்த இணையதளத்தில் நுழைய முயன்றபோது, தவறு என்று காட்டியுள்ளது. மேலும், முயற்சிக்கவும் என்று காட்டியுள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘’சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளம் விரைவில் மீட்கப்படும். இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.