முக்கிய செய்திகள்

பொருளாதாரம் கடும் சரிவு: சொன்னதெல்லாம் பொய்யா?

நாட்டின் பொருளாதாரம் கடந்த 2016 -17 ஆம் ஆண்டில் கடும் சரிவைச் சந்தித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே மக்களவையில் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2015 -16ஆம் நிதியாண்டில்  8.1 விழுக்காடாக இருந்த GDP என்ற ஒட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சிக் குறியீடு, இந்த ஆண்டு 7.1 சதவீதமாக தடாலென சரிந்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் 7.5 விழுக்காடாக இருந்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு நாட்டின் தொழில்துறை, மற்றும் சேவைத்துறையிலும் பிரதிபலித்திருப்பதாக மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அருண் ஜேட்லி பதிலளித்துள்ளார். கட்டமைப்பு, முதலீட்டு பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால், பொருளாதாரத்தில் இந்தச் சரிவு ஏற்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். வர்த்தகம் செய்ய எளிதான  நாடுகளில் இந்தியா முன்னேறி உள்ளது, கடந்த காலாண்டு கணக்குப்படி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது (குஜராத் தேர்தலின் போது  இவையெல்லாம் முக்கியப் பிரச்சரமாக இருந்தன) என்றெல்லாம் பெரிதாக பேசப்பட்டது. ஆனால், கடந்த மூன்று நிதியாண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் தொடர் சரிவையே சந்தித்து வருகிறது என்பதை, அருண் ஜேட்லியே ஒப்புக்கொண்டுள்ளார். அப்ப வளர்ச்சி… வளர்ச்சினு இவுங்க சொன்னதெல்லாம் பொய்யா…னு சிறிதளவு  சிந்திப்பவர்களுக்குள் கேள்வி எழக் கூடும். அதற்கு ஆளுவோர் தான் பதில் கூற வேண்டும்.

Indian Economy slowdown