முக்கிய செய்திகள்

இந்தியத் தூதரகம் உள்ளிட்ட தூதரகங்களில் வீசப்பட்ட மர்மப் பொருட்களால் பரபரப்பு..

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் தூதரகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் மர்மப் பொருட்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி பாகிஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தூதரக வளாகங்களில் சந்தேகத்துக்கிடமான் பொருட்கள் வீசப்பட்டுக் கிடந்தன.

இதையடுத்து அனைத்து தூதரகங்களுக்கும் போலீசார், தீயணைப்புத் துறையினர் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் விரைந்தனர். சந்தேகத்துக்கிடமான பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தூதரக ஊழியர்கள் அச்சத்துடன் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்திருந்தனர். இதுவரை அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நேரவில்லை.

இந்நிலையில் நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ள நிலையில் மக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன