காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய மருத்துவக்கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு மற்றும் 76-ஆவது செயற்குழு கூட்டம் காரைக்குடி IMA KARAIKUDI (KMC) கிளை சார்பில் மே.21 அன்று அமராவதி மகாலில் நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய மருத்துவக் கழக மாநிலத் தலைவர் Dr. செந்தில் பாரி தலைமைில் மாநில செயலாளர் Dr. தியாகராஜன், மாநில பொருளாளர் Dr. அழகவெங்கடேசன், IMA NHB TNSB சேர்மன் Dr. கார்த்திக் பிரபு, செயலாளர் Dr. அன்புராஜன், பொருளாளர் Dr. ரெங்கராஜ் , IMA KARAIKUDI (KMC) கிளை தலைவர் Dr. சந்திரமோகன், செயலாளர் Dr. குமரேசன், பொருளார் Dr. பாலாஜி மற்றும் மருத்துவக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாநாடு நிறைவாக பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசை வலியுறுத்தினர்.

அந்த தீர்மானங்கள்

  1. அவசர சிகிச்சை அறையில் பணி செய்யும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.
  2. தனியார் மருத்துவமனைகளுக்கு ஒற்றைச் சரள( Single Window System) முறையில் அனைத்து அனுமதிகளையும் ஆன்லைன் மூலம் Clinical establisment act அனுமதியை வழங்கும் போதே வழங்க வேண்டும். Fire Licence, Pollution Certificate (Air, Watre & BMW), Scan registrationand Sanitary Certificate , அனுமதி 5 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.
  3. மருத்துவரது மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்துக் கடைகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் வழங்க வேண்டும்.
  4. சமூக வலைத்தளங்களில் மருத்துவ அறிவுரை மற்றும் விழிப்புணர்வு என்ற போர்வையில் தவறான சிகிச்சை முறைகளை தகுதியற்ற சிலர் தங்கள் சுய விளம்பரத்துக்காக செய்வதை அரசு உரிய முறையில் கண்காணித்து அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  5. 2010-க்கு முன் கட்டப்பட்ட மருத்துவமனைகளுக்கு இப்போது உள்ள கட்டிட விதிமுறைகளை சில பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகள் கோருவதை அரசு உரிய கவனம் செலுத்தி புதி வழிகாட்டுதலை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்.
    மேற்கண்ட 5 தீர்மானங்களையும் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி விரைவில் நடவடிக்கைளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
    செய்தி & படங்கள்
    சிங்தேவ்

இராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் :காரைக்குடியில் ப.சிதம்பரம் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியேற்பு..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

Recent Posts