போஸ்ட் பேமென்ட் வங்கியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட் வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 50,000 கணக்குகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை நாட்டின் உள்ள ஓவ்வொரு மூளையிலும் கொண்டு செல்வோம். ஓவ்வொரு வீட்டுவாசலிலும் அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை கிடைக்கும்” என்றார்.

இந்திய கிராமப்புறங்களில் தற்போது 50 ஆயிரம் வங்கி கிளைகள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. அதே சமயத்தில் அஞ்சல் துறைக்கு நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் சேவை மையங்களை அமைத்துள்ளன. அஞ்சல்துறை சேவை மையங்கள் வங்கி சேவைகளை வழங்கும் மையமாக மாற்றப்படுவதால் இந்திய கிராம மக்களுக்கு வங்கி சேவை எளிதாக கிடைக்க வழி ஏற்படுகிறது.

“போஸ்ட் பேமென்ட் வங்கிகள் தொடங்கப்படுவதன் மூலம் கிராமப்புற வங்கிச் சேவை மூன்றரை மடங்கு அதிகரிக்கும். மக்கள் தாங்களாகவே மின்னணு பரிவா்த்தனை கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்னா் அவா்களுக்கான உதவிகளையும் போஸ்ட் பேமென்ட் வங்கி ஊழியா்கள் மேற்கொள்வா்.

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் மூன்று வகையான சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். வழக்கமான சேமிப்பு கணக்கு, மின்னணு சேமிப்பு கணக்கு, அடிப்படையான சேமிப்பு கணக்கு என்று மூன்று விதமான வசதிகள் கிடைக்கும். இந்த சேமிப்பு கணக்குக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும்.

இந்த சேவையில் குறைந்தபட்ச இருப்புத் தொகை, குறைந்தபட்ச டெபாசிட், பராமரிப்பு கட்டணம் என கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் இந்த சேவைகள் இருக்கும். இருப்புத் தொகை இல்லாமல் கணக்கு தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கும் போஸ்ட் பேமென்ட் வங்கியின் சேவைகள் கிடைக்கும்.” என்று என்று போஸ்ட் பேமென்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சேத்தி தெரிவித்துள்ளார்.

IPPB எனவும அழைக்கப்படும் இத்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் டிசம்பர் 31, 2018க்குள் ஒருங்கிணைக்கப்படும்.