இந்திய உள்நாட்டு உற்பத்தி சர்ர்….!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 8.2 சதவீதத்தை எட்டியிருந்தாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 7.1 சதவீதமாக குறைந்து உள்ளது என்றும், இது, கடந்த மூன்று காலாண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுடன் ஒப்பிடும்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.