இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 18 மாதங்களாக சர்ர்ர்ர்…!

அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த18 மாதங்களாக கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.. புதன்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 68 காசுகளாக சரிந்தது. 18 மாதங்களாக தொடர்ந்து சரிவின் எதிரொலியாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி இருந்ததை காட்டிலும், 0. 62 விழுக்காடு அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை முன்பிருந்ததை காட்டிலும் சற்று உயர்ந்துள்ள நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த போக்கு தொடருமானால், இந்தியாவின் டாலர் கையிருப்பு கேள்விகுறியாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 Indian rupee has fallen against the US dollar

 

 

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் வைத்த ஆப்பு!

2018-19ல் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு : தமிழக அரசு

Recent Posts