17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் உலக அழகியாக தேர்வு…


2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியப் பெண் மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இவர்அரியான மாநிலத்தை சார்ந்தவர். 17-ஆண்டு களுக்குப் பிறகு இந்தியப்பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் சன்யா நகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் ஹரியானாவை சேர்ந்த, மிஸ் இந்தியா மனுஷி சில்லர் உள்ளிட்ட 118 அழகிகள் கலந்துகொண்டனர். இதில் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மனுஷி சில்லர் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து 2016-ஆம் ஆண்டு உலக அழகியான பியூர்டோரிகோவின் ஸ்டெஃபானி டெல் வாலி, மனுஷி சில்லருக்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார்

போட்டியின் போது மனுஷி சில்லரிடம் எந்தப் பணிக்கு மிகப்பெரிய ஊதியம் வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. தாயாக இருக்கும் பணிதான் சிறப்பானது என்றும் அதற்கு பணமாக இல்லாவிட்டாலும், அன்பு மற்றும் மரியாதை என்ற மிகப்பெரிய ஊதியம் வழங்கப்படுவதாகவும்