முக்கிய செய்திகள்

இந்தியாவில், மேலும் 8,171 பேருக்கு கரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..

இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது..

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இன்று (ஜூன் 2) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு
மஹாராஷ்டிரா – 70,013 – 2,362
தமிழகம் – 23,495 – 184
டில்லி – 20,834 – 523
குஜராத் – 17,200 – 1,063
ராஜஸ்தான் – 8,980 – 198
மத்திய பிரதேசம் – 8,283 – 358
உத்தர பிரதேசம் – 8,075 – 217
மேற்கு வங்கம்- 5,772 – 325
ஆந்திரா – 3,783 – 64
கர்நாடகா- 3,408 – 52
தெலுங்கானா – 2,792 – 88
கேரளா – 1,326 – 10
புதுச்சேரி- 74 – 0