
காரைக்குடியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லுாரி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு கீழே காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

உடன் நகர தலைவர் பாண்டி முனியப்பன், நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முக தாஸ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், நகர மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, கொத்தமங்கலம் காந்தி , மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்