தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது; 6 ஆண்டுகளில் அருமையான சாதனை: ராகுல் விமர்சனம்..

தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக வந்துவிட்டார்கள் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ 6 ஆண்டுகளில் பாஜகவின் அருமையான சாதனை” என விமர்சித்துள்ளார்.

சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) வெளியிட்ட உலகநாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது.
அதேசமயம் 2021-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டெழுந்து 8.8 சதவீத வளர்ச்சி அடையும், உலகில் அதிவேகமான வளர்ச்சியைக் கொண்ட நாடுகள் பட்டியலில் சேரும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியான 8.2 சதவீதத்தைவிட இந்தியா முந்திவிடும் என்று தெரிவித்திருந்தது.

சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு, வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதில் “ பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது” என்று தெரிவித்து கிண்டல் செய்யும் விதமாக கைதட்டும் படங்களையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மலேசியாவில் ஆட்சி மாற்றம்?: மாமன்னரைச் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் அன்வார்…

ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் : அரசாணை வெளியீடு…

Recent Posts