ஹெச் 1 பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணியாற்றும் துறைசார் வல்லுநர்களின் பணிக்கு ஆபத்து வந்திருப்பதைப் போல, அவர்களது மனைவிமார்களுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்யப்புக்கும் வெடி வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது அதிபர் ட்ரம்பின் அரசு நிர்வாகம்.
ஹெச் 1 விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுவோர் மனைவிமாரும் அவர்களுடன் தங்க அனுமதி வழங்கி, அவர்களுக்கென்று வழங்கப்பட்டதுதான் ஹெச் 4 விசா. ஹெச் 4 விசா மூலம் கணவருடன் தங்கி இருக்க அமெரிக்கா செல்வோர், 2013 வரை அங்கு எந்தப் பணிக்கும் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. 2015 ்ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹெச் 4 விசா மூலம் தங்கி இருக்கும் இந்தோ – அமெரிக்கர்களின் மனைவி மார்களுக்கும் கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் முக்கியத்துறைகளில் பணிகள் வழங்குவதற்கான அனுமதி ஆணையை ஒபாமா அரசு பிறப்பித்தது. அதன் கீழ் ஹெச் 4 விசா பெற்ற பெண்கள் பலர் அமெரிக்க நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெறத் தொடங்கி உள்ளனர். தற்போது, வரும் பிப்ரவரி மாதம் ஒபாமா அரசு வழங்கிய ஆணையை ரத்து செய்வதற்கான முயற்சிகளை ட்ரம்ப் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஹெச் 1 பி விசாதாரர்களுடன், ஹெச் 4 விசா மூலம் அமெரிக்காவில் தங்கி இருக்கும் அவர்களது மனைவிமாரும் அமெரிக்காவில் இருந்து மூட்டையைக் கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Indo-American families face uncertainties as Trump admin plans to rollback H4 spouse visa