முக்கிய செய்திகள்

இந்தோனேஷியா ஜாவா தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு..


இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள எதுவும் வெளியாகவில்லை. சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.